சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராமர் சீதா திருக்கல்யாணம் நடந்தது.
இங்குள்ள அனுமன, சீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீ ராமர் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறபு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. காலை 11:00 மணிக்கு ராமர் சீதா திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.