ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கருப்பசாமி கோவில் திருவிழா; 250 கிடாய்கள் வெட்டி விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 10:10
சாணார்பட்டி, நத்தம் அருகே திருமலைக்கேணியில் காயாங்கொடை கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாத திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது சிறப்பம்சமாகும். மகாளய அமாவாசையை முன்னிட்டு புரட்டாசி மாத கடைசி வெள்ளியன்று நள்ளிரவில் அரண்மனை கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு வந்த 250 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டிய கிடாய்களின் கறியை இரவே சுத்தம் செய்து சமைத்து பாறையை சுற்றிலும் தடுப்பு கம்பி வேலி அமைக்கப்பட்ட இடத்தில் மொத்தமாக குவித்து வைத்து அதிகாலையில் சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து பின்னர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த 1000 க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களை வரிசையாக வரச்செய்து கறியை மட்டும் பிரசாதமாக வழங்கினர்.