கோ துவாதசி, பிரதோஷம்; வேண்டியது கிடைக்க சிவனை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 10:10
கோ துவாதசி; பசுவை பூஜிக்க வேண்டிய நாள். பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே நடைபெற ஆசீர்வதிக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் இவ்வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்தாலே நமக்கு நற்பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.