திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பிரதோஷ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2023 06:10
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தங்க கொடி மரம் அருகில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தி பகவான், ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு, தேன், பால், தயிர் உட்பட, 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.