பதிவு செய்த நாள்
28
அக்
2023
05:10
பெரியகுளம்; கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் வேண்டி கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், அறம் வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் நந்தீஸ்வரர் மீது உட்கார்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் தென்னாடுடைய சிவனுக்கும், நந்தீஸ்வரருக்கும் அன்னாபிஷேகம், காய்கறிகள், பழங்கள் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகமும், விக்னேஷ்வரருக்கு பூஜைகள், ருத்ர ஹோமம் பூஜை, சிவனுக்கு பால் தயிர் அரிசி மாவு உட்பட 11 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது மல்லிகைப்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்தி ஆகிய பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார். ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம், காய்கறிகள், பழங்கள் அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. தையல நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இந்திரன்புரித்தெரு தையல் நாயகி உடனுறை சிவனேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.