ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியபட்டி மகாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு சக்தி கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் தலைமையில் 100 பெண்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மியாட்டம் நடந்தது. முருகப்பெருமான் மற்றும் வள்ளி ஆகியோரின் வரலாற்றை நினைவூட்டும் விதமாகவும் கொங்கு நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இந்த கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர்.