பதிவு செய்த நாள்
21
நவ
2023
10:11
பழநி: பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நேற்று (நவ.20) முதல் நவ.,26 வரை நடைபெற உள்ளது. நேற்று மலைக்கோயிலில் சாயரட்சை பூஜையில் விநாயகர், மூலவர், சண்முகர், சின்ன குமாரசுவாமி, துவாரபாலகர்கள், மயில்வாகனம் ஆகியவற்றிற்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. சண்முகார்ச்சனை, தீபாராதனை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, யாகசாலை தீபாராதனை, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. விழாவில் சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகருக்கு அர்ச்சனை, தங்க சப்பரத்தில் சின்னகுமார சுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
நவ.25., ல் மாலை சன்னதியில் பரணி தீபம் ஏற்றுதல் நடைபெறும். திருக்கார்த்திகை தினமான நவ.,26., அன்று மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 4:45 மணிக்கு சின்ன குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வருவார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தொடர்ந்து பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:15 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், அக்னி லிங்க தரிசனமும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறும். இதை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயிலில் மகா தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும்.