குலசையில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2012 10:10
சாத்தான்குளம்: குலசை முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. இந்து மக்கள் கட்சி சாத்தான்குளம் ஒன்றிய செயற்குழு வைரவம் புதுக்குடி இசக்கியம்மன் கோயிலில் வைத்து நடந்தது. ஒன்றிய தலைவர் துரைபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன், ஒன்றிய செயலாளர் கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் முனிபாண்டியன், ஒன்றிய துணைத்தலைவர் முத்து, மீனவர் அணி தலைவர் ஜோசப் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குலசேகரன்பட்டனம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு குடிநீர் வசதி கழிப்பிட வசதி கடற்கரையில் பெண்களுக்காக உடை மாற்றும் அறை ஆகியவை அதிகளவில் செய்து கொடுக்க வேண்டும், 5ம் தசரா முதல் 11ம் திருநாள் வரை பக்தர்கள் காப்பு அறுக்கும் வரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 6 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைவிட வேண்டும், குலசை முத்தாரம்மன் கோயிலில் வாகன கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த கலெக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கோயில் சிறப்பு தரிசன கட்டணத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், 10ம் திருநாள் அன்று அனைத்து பக்தர்களும் வாகனங்களும் ஒருவழிப்பாதையை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாத்தான்குளம் நகர தலைவர் ரவி நன்றி கூறினார்.