பதிவு செய்த நாள்
01
டிச
2023
06:12
உசிலம்பட்டி: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம் மற்றும் உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி நிர்வாகிகள் அசோகன், சமுத்திரபாண்டி, மகாலிங்கம், பாண்டி, சிவப்பிரகாசம், சேகர், செல்வம், அழகுராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.