அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமெரிக்காவில் ஹிந்துக்கள் பேரணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2023 10:12
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024 ஜன.22ல் கோலாகலமாக நடக்கிறது. அதற்காக நாடு முழுதும் சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, வாஷிங்டன் பகுதியில் உள்ள ஹிந்து அமெரிக்கர்கள், அயோத்தி ராமர் கோவிலில் நடக்க உள்ள பிரான பிரதிஷ்டை கொண்டாட்டத்துக்காக உள்ளூர் ஹிந்து கோவிலில் இருந்து கார் மற்றும் பைக் பேரணி சென்றனர்.