ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்; நந்தகோபன் குமரன் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2023 10:12
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து உற்சவத்தில் ஐந்தாம் நாளான இன்று நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து, சவுரிக்கொண்டை, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, ரத்தின அபய ஹஸ்தம், ரத்தின காதுகாப்பு, விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து, அர்ஜூன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் உற்சவர் நந்தகோபன் குமரன் திருக்கோலத்தில் சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.