பதிவு செய்த நாள்
17
டிச
2023
10:12
திருவண்ணாமலை; மார்கழி மாத பிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.
மார்கழி மாதப்பிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில், சமய குறவர்கள் நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள், நடராஜர் சன்னதி முன்பு பாடப்பட்டது. பின்னர், உற்சவ மூர்த்திகளான அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில், அதிகாலை முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கிரிவலம் சென்றும், கிரிவலப்பாதையில், திருவெம்பாவை பாடல் இயற்றிய தலமான, அடி அண்ணாமலை கிராமத்தில், மாணிக்கவாசகருக்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.