பதிவு செய்த நாள்
20
டிச
2023
11:12
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், திருநறையூரில் உள்ள பர்வதவர்த்தினி உடனாய ராமநாதசுவாமி கோவில் உள்ளது. ராமன் போரில் வெற்றி பெற்றப் பிறகு இந்தக் கோவில் மூலவர் பர்வதவர்த்தினி உடனாய ராமநாதசுவாமி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்குச் சனீஸ்வர பகவான், மந்தா தேவி-ஜேஷ்டா தேவி ஆகிய இரண்டு மனைவிகளுடனும், மாந்தி-குளிகை ஆகிய இரண்டு மகன்களுடன், குடும்பமாக, மங்கள சனீஸ்வரனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இதே போல் சனீஸ்வர பகவானுக்கு வேறு எந்த தலத்திலும் நடைபெறாத திருக்கல்யாணம் உற்சவம் இந்தக் கோவிலில் நடைபெறுவது சிறப்பாகும்.
சிறப்புப் பெற்ற இக்கோவிலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு, கடந்த 16ம் தேதி கொடியேற்றம் நடந்தது. டிச.17 முதல் 23ம் தேதி வரை லட்ச்சார்ச்சனையும், 23ம் தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சியான இன்று 20ம் தேதி மாலை 3 மணிக்குச் சிறப்பு ஹோமம், கடம் புறப்பாடு நடந்தது. பின்னர், மங்கள சனிபகாவனுக்கு பால்,மஞ்சள் உள்ளிட்ட பொருட்களாக சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சனீஸ்வர பகவான், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாலை 5:25 மணிக்கு பெயர்ச்சியடைந்த போது மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை 21ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.