மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2024 01:01
சாயல்குடி; வருண பகவானால் பூஜிக்கப்பட்ட புராண இதிகாசத்துடன் தொடர்பு கொண்ட, கடற்கரை சிவாலயமாக மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் திகழ்கிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு கோயில் வளாகத்தில் 1008 விளக்கு பூஜை வழிபாடு நடந்தது. பூஜைகளை சேவா பாரதி தென்தமிழ்நாடு கடலாடி ஒன்றியத்தினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர். இரவு 8:00 மணிக்கு சமஸ்தானம் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு சுவாமி அம்பாள் உற்ஸவ மூர்த்திகளாய் மாரியூர் கடற்கரையில் எழுந்தருளினர். கடற்கரையில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியின் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் உச்சிக்கால பூஜையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வெளிப்பிரகார வீதி உலா நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் கிரிதரன், பேஸ்கார் சீனிவாசன் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.