திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2024 09:01
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் 25 நாட்கள் நடந்து வந்த ஆத்யாயன உற்சவம் நிறைவடைந்தது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் ஆத்யாயன உற்சவம் தொடங்கும். அதன்படி டிசம்பர் 12ம் தேதி ஆத்யாயன உற்சவம் துவங்கியது. முதல் 11 நாட்கள் பகல் பத்து உற்சவமும் அடுத்த 10 நாட்கள் ரா பத்து உற்சவமும் நடைபெற்றது. விழாவில் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று கோவில் அர்ச்சகர்கள், சுவாமியின் பாதத்தில் இருந்த தங்க வஸ்திரத்தை, புனித நீரால் அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்வில் திருமாலநம்பி எழுதிய திருமொழி பாசுரம் பாராயணம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமிகள், ஸ்ரீஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.