பதிவு செய்த நாள்
06
ஜன
2024
10:01
சேலம்; சேலத்தில், 108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
சேலம் 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மஹாலில், 108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை, 6:00 மணிக்கு பல்வேறு வகையான ஹோமம், கோமாதா பூஜை, விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், 8:00 மணிக்கு திருவாராதனம், தீபாராதனை நடைபெற்றது. மதியம், 12:00 முதல் 1:00 மணி வரை உச்சிகால பூஜை, மாலை, 6:00 முதல் 7:00 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு, 7:00 மணிக்கு திருவாராதனம், 9:00 மணிக்கு சயன பூஜை, ஏகாந்த சேவை நடைபெற்றது. இதில் திரான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனிடையே, 108 பெருமாள் சுவாமி சிலைகள் பூஜை செய்து வைக்கப்பட்டு இருந்தன. சிறப்பு பூஜையாக வரும், 10ல் சகஸ்ர கலச அபிஷேகம், 11ல் தோமால சேவை, 14ல் விஷ்ணு சகஸ்ரநாமாவளி ஹோமம், மகா பூர்ணாஹீதி, ராஜ உபச்சாரம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி நேற்று முதல் வரும், 14 வரை நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம், 100 ரூபாய்.