அருணாசலேஸ்வரர் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2024 07:01
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஜப்பான் நாட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் தியானம் செய்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளை வழிபட்டு சென்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.