அயோத்தி கும்பாபிஷேகம்; உலகம் முழுதும் கொண்டாட்டம்.. அமெரிக்கா டைம் ஸ்கொயரில் நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2024 09:01
அயோத்தி; பிரம்மாண்டமாக கட்டப்படும் அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழா ஜனவரி 22ம் தேதி அமெரிக்கா டைம் ஸ்கொயரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
அயோத்தி கும்பாபிஷேகம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் கும்பாபிஷேக சடங்குகள் நடைபெறும் நேரத்தில் பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. இந்துக்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளிலும் முக்கிய இடங்களில் எல்இடி திரைகள் மூலம் அயோத்தி கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது அங்கு வசிக்கும் மக்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.