பதிவு செய்த நாள்
12
ஜன
2024
08:01
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22ம் தேதி, ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. பிரமாண்ட விழாவிற்கு நாடே தயாராகி வருகிறது. இதற்காக கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ராம பக்தர்கள் விதவிதமான காணிக்கைகளை அனுப்பி வருகின்றனர். 108 அடி நீள ஊதுபத்தி, 2,100 கிலோ எடையுள்ள மணி, 1,100 கிலோ எடையுள்ள மாபெரும் விளக்கு, தங்க காலணிகள், 10 அடியில் பூட்டு மற்றும் சாவி, ஒரே சமயத்தில் எட்டு நாடுகளின் நேரத்தைக் காண்பிக்கும் வித்தியாசமான கடிகாரம் என விதவிதமான பொருள்கள் ராமர் கோயிலுக்கு வந்துள்ளது.
இதில் 2,100 கிலோ எடையில் பிரம்மாண்ட மணி, குஜராத்தின் வதோதராவிலிருந்து 108 அடி நீள ஊதுபத்தி, ராமர் கோயிலுக்கு காணிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் அயோத்திக்கு பல்வேறு மதிப்புமிக்க பொருள்கள் தொடர்ந்து காணிக்கையாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பெற்று வருகின்றனர்.