பெயருக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று... ‘ராமன்’ என்ற சொல்லுக்கு ரம்மியமானவன், ஆனந்தப்பட செய்பவன் என பொருள். ‘ராவணன்’ என்ற சொல்லுக்கு, ‘பிறரை சிரமப்படுத்துபவன், பிறர் மனதை அறுக்கக் கூடியவன்’ என பொருள். ஜனகர் தந்த வில்லை ஒடிக்க ராமன் எழுந்தவிதம், ஹோம குண்டத்தில் நெய்யை ஊற்றியதும், அக்னி கொழுந்து விட்டெரியுமே... அப்படி இருந்ததாம். அனுமன் இலங்கையை துவம்சம் செய்வதை கேள்விப்பட்டு, ராவணன் எழுந்தவிதம், மயானத்தில் சிதை எரியும் போது எழுந்த தீயைப் போல இருந்தது என்கிறது ராமாயணம். எனவே இனி குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது, பெயருக்கான பொருளைத் தெரிந்து கொண்டு வையுங்கள்.