மறைந்திருந்து வாலி மீது அம்பு எய்தார் ராமர். அம்பு பாய்ந்ததால் கீழே விழுந்த அவன் ராமரை கண்டு பிரம்மித்துப் போனான். ‘சக்கரவர்த்தி திருமகனே! நீயா இப்படிச் செய்தது? உன்னிடமா இரக்கம் இல்லை? என் மீது அப்படி என்ன குற்றம் கண்டாய்? சீதைக்கு துன்பம் இழைத்த காகாசுரனுக்குக் கூட வாழ்வு அளித்தாயே. ஆனால் எனக்கு மரணத்தை தந்து விட்டாயே... ஏன்? புரிகிறது... தாயாக விளங்கும் சீதையை பிரிந்ததால் உன் மனதில் ஈரம் இல்லாமல் போனதோ...’ என புலம்பியபடி உயிர் நீத்தான் வாலி.ராமனிடம் வைக்கும் எந்த கோரிக்கையையும் தாயான சீதையிடம் கேட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.