உலகளந்த பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருஅவதார உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2012 10:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் முதல் ஆழ்வார்கள் திருஅவதார உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவிலில் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் திருநட்சத்திர விழா நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலை 10 மணிக்கு முதல் ஆழ்வார்கள் மூவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமறை நடந்தது.மாலை 6 மணிக்கு பூதத்தாழ்வார் வருடசாற்றுமறை, 7 மணிக்கு நவராத்திரி நிறைவாக அம்பு போடுதல், ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதி புறப்பாடு நடந்தது.இன்று முதல் ஆழ்வார்கள், திருமங்கை ஆழ்வார், மனவாள மாமுனிகளுக்கு மங்களாசாசனம், பகல் 11 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், ஆழ்வார்கள் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் சாற்றுமறை நடக்கிறது.சுவாமி சன்னதியை அடைந்தவுடன் இரவு 8 மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்த சேவை, சாற்றுமறை நடக்கிறது.