திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர், கொட்டாமேடு புத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.அரகண்டநல்லூர், கொட்டாமேடு பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நவராத்திரி விழாவின் நிறைவாக இன்று மாலை மகிஷாசூர மர்த்தினி மகிஷி வதம் செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சவுந்தர்யகனக துர்க்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.