திருமலையில் புரந்தரதாசரின் ஆராதனை மஹோத்ஸவம்; 300 கலைஞர்கள் கோஷ்டிகானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2024 10:02
திருப்பதி; திருமலை, கர்நாடக இசைத் தந்தை புரந்தர தாசரின் ஆராதனை மஹோத்ஸவம் திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் பிப்ரவரி 8முதல் 10 வரை தாச சாகித்திய திட்டத்தின் கீழ் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று திருமலையில் உள்ள கல்யாணவேதிகாவில் இரவு 7 மணிக்கு இளம் கலைஞர்களை பங்கேற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா நவரத்ன மாலிகா கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதானமான ஒன்பது சங்கீர்த்தனங்களை கிட்டத்தட்ட 300 கலைஞர்கள் கோஷ்டிகானம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாச சாகித்ய திட்டத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யுலு செய்திருந்தார்.