தை கடைசி சோமவாரம்; ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2024 10:02
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெண்ணிற வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.