27 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை அனுபவித்த மண்டேலாவால் தென்னாப்பிரிக்கா சுதந்திரம் பெற்றது. அவரே அந்நாட்டின் அதிபரானார். ஒருநாள் அவர் பாதுகாவலர்களுடன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அங்கிருந்த பெரியவர் ஒருவரைக் கண்டதும், ‘இவர் விரும்பும் உணவைக் கொடுங்கள்’ என பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். பெரியவரோ சாப்பிட மறுத்தார். ஆனால் பாதுகாவலர்கள் அவரை கட்டாயப்படுத்தினர். அவசரமாக சாப்பிட்டு வெளியேறினார். ‘நன்றி கூட சொல்லாமல் செல்கிறாரே’ என கேட்ட போது, ‘‘நான் சிறையில் இருந்த காலத்தில் உப்பு இல்லாத களி, கூழை தருவார். தண்ணீர் கேட்டால் சிறுநீரைக் குடி என்பார். சவுக்கடி கொடுப்பார். மேலதிகாரியின் கட்டளைப்படி நிறைவேற்றிய ஜெயிலர்தான் இவர். கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்காக வெட்கப்பட்டு போய்விட்டார்’’ என்றார் மண்டேலா. துன்பம் செய்தவரை வெட்கப்படுத்துங்கள்.