வணிகர் ஒருவர் தேவாலயத்திற்கு சென்றார். அப்போது தன்னிடம் இருந்த பணப்பையை தவற விட்டார். அங்கிருந்த ஒருவர் அதை எடுத்தார். அதில் பணமும், நகையும் இருந்தது. தன் வீட்டின் முன் ‘பணப்பையைத் தொலைத்தவர்கள் அணுகலாம்’ என அறிவிப்பு ஒன்றை வைத்தார். அப்போது அங்கு வந்த வணிகரின் கண்ணில் அந்த அறிவிப்பு பட்டது. அடையாளம் சொல்லி பையை பெற்றுக் கொண்டார். அவரின் நேர்மையைக் கண்ட வணிகர் தங்க நாணயத்தை வலுக்கட்டாயமாக திணித்து விட்டு புறப்பட்டார் வணிகர். வீட்டின் உரிமையாளர் ‘திருடன் திருடன்’ எனக் கத்திக் கொண்டே அவர் பின் சென்றார். அங்கிருந்தோர் வணிகரை பிடித்தனர். நடந்ததை சொல்லிய உரிமையாளர், ‘என் நேர்மையை இவர் திருடிச் செல்கிறார்’ என விளக்கம் கொடுத்தார். சம்பாத்தியம் செய்யும் பணத்திலும் (நாணயம்) பண்பட்ட வார்த்தையிலும் (நாநயம்) நேர்மை வேண்டும் என்கிறது பைபிள்.