திருச்செந்தூரில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதி உலா; நாளை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 11:02
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் 8ம் திருவிழாவான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 8ம் திருவிழாவான நேற்று காலை 5:00 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். சிவன் கோயிலை வந்தடைந்த அவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 11:00 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் மரிக்கொழுந்து மாலை பச்சை பட்டு சாத்தி வழிபட்டனர். 10ம் நாளான நாளை 23ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 24ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. 25ம் தேதி 12ம் நாள் திருவிழாவுடன் மாசி திருவிழா நிறைவு பெறுகிறது.