யானை நடமாட்டம்; திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 05:02
திருநெல்வேலி; திருக்குறுங்குடி நம்பி கோயில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 79 வது திவ்ய தேசம். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு. இங்கு மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் பஞ்சகேத விமானம். இங்கு மோட்சம் வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தலத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். தற்போது யானை நடமாட்டம் அதிகம் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.