* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர். * தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம். * மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார். * சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு. * ஆமை சிவபூஜை செய்த தலம் திருமணஞ்சேரி. * பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம். * சிவனின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்வது சோமாஸ்கந்தர். * பஞ்சாட்சர மந்திரத்தை தமிழில் ‘திருவைந்தெழுத்து’ என்று சொல்வர். * சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர் சிறப்புலி நாயனார். * சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர் முருக நாயனார். * ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர். * நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார். * தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள். * பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை ‘திருப்பாட்டு’ எனக் குறிப்பிடுவர். * இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத் தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம். * மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள். * திங்களன்று சிவராத்திரி வந்தால் அதற்கு ‘யோக சிவராத்திரி’ என்று பெயர். * திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில். * பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில். * ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை.