Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவனை நினை மனமே வாழ்நாள் முழுதும் சிவபூஜை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பீஷ்மர் சொன்ன கதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2024
01:03


இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு.  இந்த மன்னரை அஷ்டவக்கிர முனிவர் ஒரு
சிவராத்திரியன்று சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னர் முனிவரிடம், “ஐயனே! நான் ‘சுஸ்வரன்’ என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள் பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கி விட்டேன். மிருகங்களிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் ஏறினேன். பசிமயக்கத்தால் துாக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்தது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
மரணம் ஏற்பட்டு உயிர் நீங்கிய பின் சிவகணங்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். ‘நீ வேட்டையாடச் சென்ற நாள் மகாசிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். அதன் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று சிவலிங்கத்துக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்த உனக்கு நற்கதி கிடைத்தது’ என்றனர். அதனால் சித்திரபானு என்னும் பெயரிலேயே மன்னராக பிறக்கும் பேறு பெற்றேன்” என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் செல்வந்தராக வாழ்வர். அவர்களின் சந்ததியும் வளம் பெறும்.
அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர் மூலம் இந்த வரலாற்றை பாண்டவர்கள் அறிந்து கொண்டனர். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar