பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2024 10:03
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் மார்ச் 1 பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் சிங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அபிஷேகங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு 7:00 மணிக்கு அம்மன் பூதகி வாகனத்தில் அலங்காரமாகி வீதியில் வலம் வந்தார். அப்போது பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி, தலைவர்களின் வேடமணிந்தும், பாரம்பரிய நடனமாடியும் வந்தனர். 4 ம் நாள் மார்ச் 20 அம்மன் காளி அலங்காரம், மாலை 6:00 மணிக்கு வண்டி மாகாளி சூரசம்ஹாரம் நடக்கிறது. மார்ச் 25 காலை துவங்கி அக்னி சட்டி ஊர்வலம் இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்கார தேரில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளுகிறார். அப்போது பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க நான்கு மாட வீதிகளில் தேரினை இழுத்து வருவர். மார்ச் 27 அதிகாலை 4:00 மணி தொடங்கி பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க உள்ள பால்குட நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.