கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் பங்குனி மாதம் முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் புவனேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெண்ணிற வஸ்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.