மதுரை அனுமார் கோயில் ஸ்ம்ப்ரோக்ஷ்ணம் பெருவிழா; நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2024 12:03
மதுரை; மதுரை, தத்தனேரி கிராமத்தில் அமைந்துள்ளது அனுமார் கோவில். ராமனுக்கே தொண்டு செய்து உயர்ந்த ஸ்ரீ அனுமார், மதுரை தத்தனேரியில் ஸ்ரீ வியாசராயர் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல நூறு வருடங்களாக பக்தர்களுக்கு கேட்பவருக்கு கேட்ட வரம் அளிக்கும் கருணாமூர்த்தியாக எழுந்தருளி கோயிலில் அருள்பாலித்து வருகிறார். அருள்மிகு அனுமார் சுவாமி திருக்கோயிலில் புனர்வு தாரான அஷ்ட பந்தன மஹா ஸ்ம்ப்ரோக்ஷணம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை (24ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தசி திதியும், உத்திரம் நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் - ரிஷப லக்கணத்தில் அனுமார் சுவாமிக்கும் பரிவார தேவதைகள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் மஹா ஸ்ம்ப்ரோக்ஷண (மஹா கும்பாபிஷேகம்] நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் வளர்மதி, செயல் அலுவலர் அங்கயற்கண்ணி செய்துள்ளனர்.