புனித வெள்ளி : ராமேஸ்வரத்தில் ஏசுநாதர் சிலுவை சுமக்கும் தத்ரூபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2024 05:03
ராமேஸ்வரம்; புனித வெள்ளி யொட்டி ராமேஸ்வரத்தில் மீனவ இளைஞர்கள் ஏசுநாதர் சிலுவையை சுமந்து செல்லும் துயர காட்சியை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
ஏசு நாதரை கைது செய்து சிலுவையை சுமக்க செய்து சிலுவையில் அறையப்பட்டு உயிரிழக்கும் இந்நாளை புனித வெள்ளியாக கருதி உலக முழுவதும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வழிபடுவார்கள். அதன்படி இன்று புனித வெள்ளி யொட்டி ராமேஸ்வரம் ஓலைகுடா சேர்ந்த மீனவ இளைஞர்கள் சிலர் ஏசுநாதர் மற்றும் வீரர்கள் போல் வேடமிட்டனர். பின் ராமேஸ்வரம் ஓலைகுடா சங்குமால் கடற்கரையில் இருந்து ஓலைக்குடா குழந்தை ஏசு சர்ச் வரை ஏசுநாதர் சிலுவையை சுமந்து சென்றும் அவர் மீது வீரர்கள் சவுக்கால் அடிப்பதை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். பின் சர்ச்சில் பாதிரியார் ஜான்சன் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி பூஜை செய்தார். இதில் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.