Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலுக்கு மின்சார பஸ் வழங்கிய ... ஓம்சக்தி படத்தில் தோன்றிய மயிலிறகு; பக்தர்கள் ஆச்சர்யம் ஓம்சக்தி படத்தில் தோன்றிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா; ஏப்.14 ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா; ஏப்.14 ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2024
12:04

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா வருகிற ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வைகை ஆற்றுக்குள் சிறுவர்களுக்காக ராட்டினங்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற ஏப்.14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து 10:30மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும், ஏப்ரல் 22ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகர்கள் செய்து வருகின்றனர்.சித்திரைத் திருவிழா தூங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.8 லட்சம் செலவில் வைகை ஆற்றை சீரமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,கமிஷனர் ரங்கநாயகி, பொறியாளர் சீமா ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar