பழநி; பழநி கோயிலுக்கு (குமரன் தங்கமாளிகை, ஸ்ரீ சென்னை சில்க்ஸ்) நிறுவனத்தார் மின்சார பஸ் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
பழநி கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூரிலிருந்து வருகை புரிகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்திரவின்படி தற்போது கிரிவீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் பக்தர்களின் போக்குவரத்திற்கு வசதி செய்யும் தரும் வகையில் கட்டணம் இல்லா வாகனங்களை இயக்க கோயில் நிர்வாகத்திற்கு கோர்ட் அறிவுருத்தி உள்ளது. இந்நிலையில் கோயில் சார்பில் ஒரு பஸ், மற்றும் மூன்று மின்சார கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பக்தர்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் (கோவை சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை) தனியார் நிறுவனம், பழநி கோயிலுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் மின்சார பஸ் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். இதில் 23 நபர்கள் பயணம் செய்யலாம். ரூ. 15 லட்ச ரூபாய் மதிப்பில் மின்சார பஸ்ஸை பாத விநாயகர் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் இணை கமிஷனர் மாரிமுத்துவிடம், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பரஞ்சோதி மற்றும் குடும்பத்தார் பஸ்ஸை ஒப்படைத்தனர்.