ஓம்சக்தி படத்தில் தோன்றிய மயிலிறகு; பக்தர்கள் ஆச்சர்யம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2024 12:04
திட்டக்குடி; திட்டக்குடி ஆதிபராசக்தி வார வழிபாட்டுமன்றத்தில் உள்ள ஓம்சக்தி படத்தில், நேற்று மாலை முதல் மயிலிறகு போன்ற தோற்றம் உருவானது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச்சேர்ந்தவர் சிவகுமாரன்,77. இவர் கடந்த 40ஆண்டுகளுக்கு மேலாக திட்டக்குடியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டுமன்றத்தை நிர்வகித்து வருகிறார். இவரது வீட்டின் ஒருபகுதியில் வழிபாட்டுமன்றமும், அதில் ஓம்சக்தி படங்களும் உள்ளன. அதில் முதன்முதலில் மேல்மருவத்துாரில் வாங்கிய பழமையான ஓம்சக்தி படத்தில் நேற்று மாலை முதல், அம்மன் காலடியில் மயிலிறகுப்போன்று ஒரு தோற்றம் புதியதாக தென்பட்டது. இதனால் ஆச்சர்யமடைந்த பக்தர்கள், ஒன்றுகூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். 40ஆண்டுகளுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த ஓம்சக்தி படத்தில் மயிலிறகில் உள்ள கண்கள் போன்ற தோற்றம் தென்படுவதை பார்த்த பக்தர்கள், பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.