பட்டத்தரசி அம்மன் கோவிலில் 13 வருடங்களுக்குப் பிறகு பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2024 04:04
அவிநாசி; அவிநாசி கைகாட்டி புதூர் அம்பேத்கர் வீதியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி கைகாட்டி புதூர், அம்பேத்கார் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் 13 வருடங்களுக்குப் பிறகு கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. நேற்று இரவு மகா முனி பூஜை நடைபெற்றது. நேற்று காலை படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் ஆகியவை நடைபெற்றது. அதன் பின்னர், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர் . அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல், சாமி ஊர்வலம் வருதல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றது. நாளை சாமி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா உடன் விழா நிறைவு பெறுகிறது