சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை, தண்டம் சமர்ப்பித்தல், சுவாமிக்கு தண்டனிட்டேன் என்று குறிப்பிடுவர். தண்டம் என்றால் கழி அல்லது கோல். கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால் அது அப்படியே தடாலென்று கீழே விழுந்து விடும். அதுபோல நம் உடம்பையே நம்முடையது அல்ல என்ற எண்ணத்துடன் கீழே போடுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம். நம் உடம்பு தண்டமானது. அதை தூக்கிப் பிடித்து ஆட்டுகின்ற சக்தி ஆண்டவனுடையது என்று எண்ணும் போது ஆணவம் அடங்கிவிடும். ஆணவத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.