வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டத்தில் குமாரசம்பவம் கதை இடம்பெற்றுள்ளது. விஸ்வாமித்திரர் ராமலட்சுமணரை அழைத்துச் செல்லும்போது, முருகனின் வரலாற்றை குமாரசம்பவம் என்னும் பெயரில் எடுத்துச் சொல்கிறார். இதைக் கேட்டவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதையும் விஸ்வாமித்திரர் குறிப்பிட்டிருக்கிறார். ராமா! குமாரசம்பவம் கதையைக் கேட்டவர்க்கு தனம், புண்ணியம் கிடைக்கும். கார்த்தி கேயனிடம் பக்திவைத்தால் நன்மை உண்டாகும். பிறவியின் முடிவில், ஸ்கந்தலோகத்தில் நித்யவாசம் செய்யலாம் என்று குறிப்பிடுகிறார். வால்மீகி எழுதிய குமாரசம்பவம் என்பதை, தான் எழுதிய காவியத்தின் பெயராக காளிதாசர் அமைத்துக் கொண்டார்.