திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 10:04
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : சென்னை, திருவல்லிக்கேணியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். நாளை 30ம் தேதி வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, மே1 ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது.