கட்டுக்குடிப்பட்டி மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 11:04
எஸ்.புதூர்; எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டி செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை 7:45 மணிக்கு கோயில் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு பெண்கள் ஊர்வலமாக ஆரத்திகுடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அதிகாலை 3:30 மணிக்கு பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்து வழிபட்டனர். இன்று காலை 9:00 மணிக்கு ஊர் பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு பேத்தப்பன் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டுகுடிப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.