அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, இராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் 49 ம் ஆண்டு விழா கடந்த 23 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 28 ம் தேதி மாலை அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து கும்மி அடித்து அம்மனை தர்சித்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இன்று 29 ம் தேதி மாலை பூ வோடு எடுத்தல், 30 ம் தேதி மாலை மாரியம்மன் அழைத்தல், மே மாதம் ஒன்றாம் தேதி அதிகாலை மாவிளக்கு ஊர்வலம், 2 ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா தொடர்ந்து, 11 மணிக்கு அன்னதானம், ஆகியவை நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.