பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
11:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் கூழமந்தல் மைதானத்தில், சித்திரை பெருவிழா நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல், நேற்று அதிகாலை வரை விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர், விசாலாட்சி சமேத கங்கை கொண்ட சோழீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் அபிஷேகமும் மற்றும் திருமஞ்சனமும் நடை பெற்றது. இதில் நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கை கொண்டசோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும்,
ஸ்ரீதேவி பூதேவி சமேத பே சும் பெருமாள் கருடவாகனத்திலும் ஊர்வலமாகச்சென்று கூழமந்தல் மைதானத்தில் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் விசேஷ அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடை பெற்றது. அம்பாள், சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆகியோரை விநாயகபெருமான், வலம் வந்து ஆசீர்வாதம் பெற்று, கஜமுக அசுரனை வதம் செய்யும் உன்னத நிகழ்ச்சியும், உலகத்தைக் காக்க மும்மூர்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்வும் விமரிசையாக ந டந்தது. நிறைவாக மஹாதீபாராதனை , சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், கூழமந்தல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.