சர்ப்ப வாகனத்தில் பவனி வந்த அம்மன்; கிராமிய நடனங்களுடன் பக்தர்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2024 02:05
குன்னூர்; குன்னூர் சந்திரா காலனி ஊர் பொதுமக்கள் சார்பில் 17ம் ஆண்டு தந்தி மாரியம்மன் தேர் திருவிழா உற்சவம் கிராமிய நடனங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டம் குன்னூர் தண்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் திருவீதி உலா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று குன்னூர் சந்திரா காலனி ஊர் பொதுமக்கள் சார்பில் 17வது ஆண்டு தேர் உற்சவ விழா நடந்தது. கரோலினா மாகாளியம்மன் கோவிலில் இருந்து சிங்காரி மேளம் தப்பாட்டம் மாடு மயில் ஆட்டம் கருப்புசாமி, அம்மன் வேடமணிந்தவர்கள் நடனம், பாலக்காடு காலை குருவாயூர் சௌபர்ணிகா கலைக்குழுவினரின் பொம்மலாட்டம் நடனம், மேள தாளங்கள் முழங்க அபிஷேகப் பொருட்களுடன் தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்திரா காலனி வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தந்தி மாரியம்மன் சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இதில், கதகளி அம்மன் மற்றும் கருப்புசாமி, அம்மன் வேடம் அடைந்தவர்களின் நடனம் பக்தர்களை பரவசப்படுத்தியது. விழாவின் ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.