Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஏப்ரல் மாதத்தில் ... ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; தருமபுரம் ஆதீனம் வழிபாடு ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பஞ்சவடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

03 மே
2024
11:05

மயிலாடுதுறை; ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய ஆனந்த தாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரத்தில் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 63 நாயன்மார்களின் மானகஞ்சாற நாயனார் அவதாரம் செய்து இறைவன் திருவிளையாடல் நடத்திய ஸ்தலமாகும். மேலும் ஆனந்த முனிவருக்கு இறைவன் ஸ்ரீமுக தாண்டவம் ஆடி காட்டிய  தலமாதலால்  இவ்வூர் ஆனந்த தாண்டவபுரம் என்ற பெயர் பெற்றது. பழமை வாய்ந்த இந்த கோயிலின்  கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன . இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நவக்கினி ஹோமம் நடைபெற்றது. 108 வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறு கால யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மகா பூர்ணாகுதிக்கு பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு சுவாமி அம்பாள் சன்னதி கோபுரங்கள் ராஜகோபுரம் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கலசபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar