Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ... கடும் வெயிலால் நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு கடும் வெயிலால் நவபாஷாணத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; தருமபுரம் ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; தருமபுரம் ஆதீனம் வழிபாடு

பதிவு செய்த நாள்

03 மே
2024
11:05

மயிலாடுதுறை; ஒட்டங்காடு மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.  தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தேவஸ்தானம்  ஓட்டங்காடு கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாராசுரனை அழித்து மக்களை காத்தருளிய அம்பிகை இத்தளத்தில் கத்தி, கபாலம், உடுக்கை, சூலம், ஜவாலாகேசத்துடன் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் அம்பிகையை மனம் உருக பிரார்த்திப்பவர்களின் குறைகளை அகற்றி சகல நன்மைகளையும் அருள்வார் எனக் கூறப்படுகிறது.  மேலும் இந்த அம்பிகை சுற்று வட்டாரத்தில் உள்ள 8 கிராம மக்களின் குலதெய்வமாக வழங்கி வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் முப்பதாம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு முதலில் அருகில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் விமான கலசங்களில் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி தலைமையிலானோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar