சித்திரை கடைசி சோமவாரம்; புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 12:05
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர வினாயகர் கோவிலில் சித்திரை கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில் வெண்ணிற வஸ்திரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.