நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 12:05
திருநெல்வேலி; நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவுக்கு முன்பாக புட்டாரத்தி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். புட்டாரத்தி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடிபட்டம் ரதவீதிகளில் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் புட்டாரத்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இரவு புட்டாரத்தி அம்மன் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 9ம் நாளில் புட்டாரத்தி அம்மன் நெல்லையப்பர் கோயிலுக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. 10ம் நாள்திருவிழாவில் தாமிரபரணி நதியில் அம்மன் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.